×

லெக்கையன்கோட்டை முதல் அரசப்பபிள்ளைபட்டி வரை நான்குவழிச்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை

அமைச்சர் அர.சக்கரபாணி துவக்கி வைத்தார்
ஒட்டன்சத்திரம், மே 26:ஒட்டன்சத்திரம் நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலின்றி சீரான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்திற்கு வசதியாக முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நெடுஞ்சாலைத்துறை மூலம் பழைய தேசிய நெடுஞ்சாலையில் லெக்கையன்கோட்டை பிரிவு முதல் அரசப்பபிள்ளைபட்டி பிரிவு வரை 7.67 கி.மீ நீளத்தில் ரூ.87.50 கோடி மதிப்பீட்டில் நான்குவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜையை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி துவக்கி வைத்தார். இதில், சாலையின் இருபுறமும் தேவையான பகுதிகளில்  வடிகால் அமைத்து, இருவழிச்சாலையை பாவுதளத்துடன் கூடிய நான்குவழிச்சாலையாக  அகலப்படுத்தி, மேம்பாடு செய்து, தார்சாலை மற்றும் வடிகால் ஆகியவற்றுக்கு  இடையில் பேவர்பிளாக் கல் அமைக்கப்பட்டு, பேருந்து நிலையம் அருகில்  பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நடைமேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் எஸ்.தினேஸ்குமார், நகர செயலாளர் ப.வெள்ளைச்சாமி, ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், தர்மராஜன், ஒன்றிய பெருந்தலைவர் அய்யம்மாள், துணைப்பெருந்தலைவர் காயத்திரிதேவி, நகர்மன்ற தலைவர் திருமலைசாமி, வட்டாட்சியர் முத்துச்சாமி, மதுரை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் மாரிமுத்துராஜன், பழனி கோட்டப் பொறியாளர் தங்கராஜன், உதவி கோட்டப் பொறியாளர் பாபுராம், உதவி பொறியாளர் ராஜன், ஊராட்சித்தலைவர் செல்லம்மாள் தண்டபாணி, துணைத்தலைவர் குழந்தைவேல், நிர்வாகிகள் சண்முகம், பார்த்திபன், அப்துல்லா, லத்தீப் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Bhoomipooja ,Lekkaiyankottai ,Arasappillaipatti ,
× RELATED வாறுகால் அமைக்க பூமிபூஜை