×

மஞ்சூரில் சாலை மேம்பாட்டு பணிகள் ஆய்வு

மஞ்சூர், மே 26: மஞ்சூரில் சாலை மேம்பாட்டு பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைதுறை கண்காணிப்பு குழு ஆய்வு மேற்கொண்டனர்.நெடுஞ்சாலைதுறை சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் அனைத்து பணிகளின் தரம் மற்றும் கட்டுமானங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தணிக்கை செய்ய வேண்டும் என நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான உள் தணிக்கை நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது. இதற்காக, சேலம் மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் அருள்மொழி தலைமையில் கோட்ட பொறியாளர் சரவணன், உதவி கோட்ட பொறியாளர் அசோகன், உதவி பொறியாளர்கள் ரமேஷ், அரவிந்த் ஆகியோர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் உதகை கோட்டம் குந்தா பிரிவுகுட்பட்ட எம்.பாலாடா-பி.மணியட்டி வழி கல்லக்கொரைஹடா-காந்திநகர் பகுதிகளில் சாலையின் நீளம், அகலம், கனம், தார் கலவை தரம், கான்கிரீட் தடுப்புச்சுவர், மற்றும் வடிகால் பணிகளின் தரம் குறித்து ஆய்வு மற்றும் உள் தணிக்கை மேற்கொண்டனர்.இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைதுறை இளநிலை பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் பெருமாள் மற்றும் சாலை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

Tags : Manzoor ,
× RELATED தேர்தலில் வாக்களித்தது புதிய...