அப்பநாய்க்கன்பட்டி கிராமத்திற்கு கால்நடை மருத்துவமனை திட்டக் குழுவிடம் மனு

சூலூர்,மே26:  சூலூர் தாலூகா அப்பநாய்க்கன்பட்டியில் உள்ளோர் ஆடு வளர்ப்புத் தொழிலில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் இப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் அதிக தொலைவில் உள்ள சூலூர், அல்லது பாப்பம்பட்டிக்கு கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது.எனவே அப்பநாய்க்கன்பட்டி பகுதியிலேயே கால்நடை மருத்துவமனை அமைக்க பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

நேற்று கோவைக்கு வருகை தந்த தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் டி.ஆர்.பி. ராஜாவை அப்பநாய்க்கன்பட்டி ஊராட்சி தலைவர் சாந்தி ராஜேந்திரன் சந்தித்து மனு அளித்தார்.அவருடன் ஊராட்சி உறுப்பினர்கள் செந்தில்குமார்,ராஜேத்திரன் மற்றும் திமுகவை சேர்ந்த ராஜேந்திரன் பாக்கியராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: