×

புதுக்கோட்டைக்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதிக்கு வரவேற்பு திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு

புதுக்கோட்டை, மே 26: புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சட்டத்துறை அமைச்சருமான எஸ். ரகுபதி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, மாவட்டப் பொருளாளர் செந்தில் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், பல்வேறு குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தரும் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கும் சிறப்பான வரவேற்பளிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், வரும் ஜூன் 3ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை அனைத்து கிராமங்களிலும் சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ கவிதைபித்தன், சொத்துபாதுகாப்பு குழு உறுப்பினர் சந்தரசேகர், இளைஞரணி அமைப்பாளர் சண்முகம், முன்னாள் எம்எல்ஏக்கள், மாநில, மாவட்ட பேரூர கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,MK Stalin ,Pudukkottai ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...