×

விராலிமலையில் தென்னம்பிள்ளைக்கு திருமணம் அக்கம்பக்கத்தினருக்கு அறுசுவை உணவு வழங்கிய திருமண வீட்டார்

விராலிமலை, மே. 26: வாழ்நாள் முழுவதும் பயன் தரும் மரமாக கருதப்படும் தென்னை மரத்திற்கு திருமணம் செய்ய விராலிமலை அம்மன் கோலில் தெருவைச் சேர்ந்த அழகேசன் -மனோன்மணி தம்பதியினர் முடிவு செய்து அக்கம் பக்கத்தினரின் வீட்டிற்கு நேரடியாக சென்று குங்குமம் வழங்கி விழாவிற்கு வருமாறு அழைத்தனர். தொடர்ந்து முகூர்த்தநாளான நேற்று காலை தென்னை மரத்தின் அருகே பொங்கல் வைத்து, தேங்காய் உடைத்து, பழங்கள், இனிப்புகள் வைத்து வழிபாடு நடத்தி தென்னை மரத்திற்கு தாலி கட்டி திருமணம் செய்து வைத்தனர். அதனை தொடர்ந்து விழாவில் பங்கேற்ற சுமங்கலிகளுக்கு மஞ்சள் கயிறு, குங்கும், தேங்காய்,பழம் கொடுத்து அறுசுவை, உணவு வழங்கி அசத்தினர். தென்னை மரத்திற்கு திருமணம் செய்து வைப்பதால் விளைச்சல் அதிகரித்து அதிக அளவில் குருத்துகள் விட்டு பாளை உருவாகி தேங்காய் அதிகளவில் காய்க்கும் என்றும், வளர்ந்த மரங்களுக்கு இளைப்பாறும் போது மேலிருந்து உதிர்ந்து விழும் தேங்காயோ தென்னங்கீற்றோ நம் மீது விழாமல் இருப்பதற்கு இதுபோல் திருமணம் நடத்துவது சாங்கியமாகவும் கருதப்படுகிறது.

Tags : Thennampillai ,Viralimalai ,
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா