×

கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி அரணாரை நீலியம்மன், செல்லியம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூர், மே 26: அரணாரை நீலியம்மன், செல்லியம்மன், எல்லமுத்துசாமி, பெரியசாமி கோயில் தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை பகுதியில் எழுந்தருளியிருக்கும் நீலியம்மன், செல்லியம்மன், எல்ல முத்துசாமி, பெரியசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 17ம் தேதி இரவு காப்பு கட்டப்பட்டது. 18ம் தேதி சந்திமறித்தல் நடைபெற்றது. தொடர்ந்து 19ம்தேதி கேடய வாகனத்திலும், 20ம்தேதி அன்ன வாகனத்திலும், 21ம் தேதி சிம்ம வாகனத்திலும், 22ம் தேதி சாரட் குதிரை வாகனத்திலும், 23ம் தேதி மின்விளக்கு அலங்காரத்திலும் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. 24ம்தேதி காலை பெரியசாமி கோயிலிலும், மாலையில் அம்மன் கோயிலிலும் பூஜைகள் நடைபெற்றது. இரவு குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் முன்னால் எம்எல்ஏ., ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சாமியை ஊர்வலமாக எடுத்து வந்து தேரில் அமர வைத்தனர். தேரோட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் நிறுவனர்தலைவர் சீனிவாசன், செயலாளர் நீலராஜ், இயக்குநர்கள் மணி, ராஜபூபதி, புதுநடுவலூர் ஊராட்சித் தலைவர் ஜெயந்தி நீலராஜ் ஆகியோர் கலந்துகொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சியில் அரணாரை மட்டுமன்றி, பெரம்பலூர், சொக்கநாதபுரம், விளாமுத்தூர், நொச்சியம், புது நடுவலூர், செஞ்சேரி, எளம்பலூர் உள்ளிட்ட சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்துகொண்டனர். இன்று மஞ்சள் நீர் தெளித்தலுடன் விழா நிறைவடைகிறது.

Tags : Aranarai Neeliyamman ,Celliyamman Temple Therottam ,
× RELATED துணைநிலை ஆளுநருக்கு வலியுறுத்தல் கீரனூர் செல்லியம்மன் கோயில் தேரோட்டம்