×

நாகப்பட்டினம் இஜிஎஸ் பிள்ளை கல்லூரி பட்டமளிப்பு விழா

நாகை, மே 26: நாகப்பட்டினம் இஜிஎஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 22வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இ ஜி எஸ் பிள்ளை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள், செயலர் செந்தில்குமார், இணைச் செயலர் சங்கர் கணேஷ், ஆலோசகர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் நடராஜன், முனைவர் முஹம்மது இஸ்மாயில் தலைமை தாங்கினர். விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக் கழக பதிவாளர் முனைவர் எல்.கணேசன் மற்றும் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் முனைவர் எஸ்.சேகர் கலந்து கொண்டனர். விழாவில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவ மாணவியர்களுக்கு 1731 பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற 28 மாணவ மாணவியர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags : Nagapattinam EGS Pillai College Graduation Ceremony ,
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை,...