தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதை கண்டித்து காரைக்காலில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

காரைக்கால், மே 26: வங்கித் தேர்வுகளில் இனி தமிழ் கட்டாயம் இல்லை என்ற முடிவுக்கு கண்டனம் தெரிவித்தும், இது தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் செயல் என்று கூறியும் திராவிடர் கழகத்தினர் நேற்று மாலை காரைக்காலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடற்கரை சாலை சிங்காரவேலர் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் காரைக்கால் மண்டல இளைஞரணி தலைவர் முபி.பெரியார் கணபதி தலைமை வகித்தார். மண்டல தலைவர் குரு.கிருஷ்ணமூர்த்தி கண்டன உரையாற்றினார். மண்டல செயலாளர் பொன்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள், மமக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நாகை, மே 26: நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நேற்று நடந்தது.

இதில் விவசாயிகள் பேசியதாவது: பிரபாகரன்: காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முன்னதாக தண்ணீர் திறந்து விட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். கீழ்வேளூரில் வேளாண் விரிவாக்க மையம் அமைக்க வேண்டும். தெலுங்கானா மாநிலத்தில் வழங்குவது போல் விவசாயிகளுக்கு நேரடியாக ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

பிரகாஷ்: உளுந்துக்கு நிவாரணம் வாங்கித் தந்தால் நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடி சிறப்பாக நடைபெறும். கடந்த 3 மாதங்களாக நாகையில் வழிப்பறி, மோட்டார் திருட்டு ஆகியன அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க வேண்டும்.

காளிமுத்து: மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 10 நாட்களுக்குள் காவிரி கடைமடை பகுதிகளுக்கு வர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ள பணிகள் என்ன என்று கூற வேண்டும்.

அமீர்: திட்டச்சேரி பகுதியில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து அதிக அளவிலான கால்நடைகள் வயல்பகுதியில் நுழைந்து விடுகின்றது. இதனால் இப்பகுதியில் நெல் விளைவிக்கவே அச்சமாக உள்ளது. இது தொடர்பாக காரைக்கால் மாவட்ட நிர்வாகத்துடன் பேசி தீர்வு காண வேண்டும்.

ராமதாஸ்: ஓடம்போக்கி ஆற்றில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் வந்து சேருவதற்கு காலதாமதம் ஆகும். ஆற்றின் போக்கும் தடைபடும். இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

பாபுஜி: குறுவைக்குத் தேவையான விதை நெல் போதுமான அளவில் கையிருப்பு வைத்திருக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் உழவு மானியமாக ஏக்கருக்கு ரூ. 600 வழங்கப்பட்டது. அதை தற்போதும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தர்: விதைகள், ரசாயன உரங்கள் ஒரு ஊரிலேயே மாறுபட்ட விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே வேளாண் துறை உரக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

தனபால்: குறுவை தொகுப்புத் திட்டத்தை பரிந்துரைக்க வேண்டும். பயிர்க் கடனை உறுதி செய்ய வேண்டும். விதைகளை போதுமான அளவில் வைத்திருக்க வேண்டும். இந்தாண்டில் 50 ஆயிரம் ஏக்கரில் நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளது. அதற்கான திட்டமிடல்களை அரசுத் துறைகள் மேற்கொள்ள வேண்டும்.

சரபோஜி: நாகை மாவட்டத்தில் மார்டன் ரைஸ் மில் அமைக்க வேண்டும். உயர்ந்து வரும் உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரத்து 500 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். குறுவைக்குப் பயிர்க் காப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. டிஆர்ஓ ஷகிலா, வேளாண் இணை இயக்குனர் ஜாக்குலாஅகண்டராவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: