×

வேதாரண்யத்தில் சிலம்ப கலை மாணவர்களுக்கு பரிசு


வேதாரண்யம், மே 26: வேதாரண்யம் தாலுகா வண்டுவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த சிலம்பக் கலைஞர் சோமசுந்தரம் நினைவு அரங்கில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், நாகை மாவட்ட சிலம்பாட்டக் கழகம் இணைந்து கலைஞர்கள், கவிஞர்கள்,பாடகர்கள்,கலைஞர்கள்,கிராமத்தினர் என பலதரப்பினர் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கிளைத் தலைவர் குழந்தைவேலு .தலைமை வகித்தார்.
சிலப்பாட்டக் கழக மாவட்டச் செயலாளர் கருணாகரன், கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலாளர் அம்பிகாபதி, கவிஞர் கருணாநிதி, ஊராட்சி மன்றத் தலைவர் வனிதா ரவிச்சந்திரன்,துணைத் தலைவர் தியகராஜன்,ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோமதி தனபாலன்,. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மூத்த ஆசான் ராமையா,கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் கவிஞர் புயல் .குமார்,துணைத் தலைவர் .பார்த்தசாரதி, சிறு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் செந்தில், முனைவர் .ராமஜெயம்,தலைமையாசிரியர் பாஸ்கரன்,நாடக ஆசிரியர் ராசேந்திரன்,கவிஞர் கோவி.ராசேந்திரன்,விவசாய சங்க தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் சங்கரன்,பவுன்.சுப்ரமணியன்,கவிஞர் அசோக், ஆசிரியர் சத்தியசிவம் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்,சிறுமியர் பங்கேற்ற சிலம்பாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags : Silamba Art ,Vedaranyam ,
× RELATED கோடை மழை 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு