×

விருத்தாசலம் ஒன்றிய குழு தலைவர் தேர்வு

விருத்தாசலம், மே 26: விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக அதிமுக கவுன்சிலர் செல்லத்துரையும், ஒன்றிய குழு துணை தலைவராக பாமக கவுன்சிலர் பூங்கோதையும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒன்றிய குழு தலைவராக இருந்த செல்லதுரை அதிமுகவிலிருந்து விலகி முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில், ஒன்றிய குழு தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஒன்றிய குழு துணைத் தலைவர் உள்ளிட்ட 15 கவுன்சிலர்கள் கோட்டாட்சியர் ராம்குமாரை சந்தித்து மனு அளித்தனர். ஒன்றிய குழு தலைவர் மற்றும் கவுன்சிலர்களிடம் விளக்கம் கேட்டு, மார்ச் 5ம் தேதி விருத்தாசலம் ஒன்றிய குழு தலைவர் செல்லத்துரை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சிறப்பு கூட்டத்தை கோட்டாட்சியர் கூட்டி நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தினார். இதில்  செல்லத்துரை மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றி 16 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டதால் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியது.

இந்நிலையில் ஒன்றிய குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நேற்று காலை 10 மணிக்கு விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தலில் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு ஏற்கனவே இருந்த செல்லத்துரையும், சுயேட்சை கவுன்சிலராக வெற்றி பெற்று திமுகவில் இணைந்த கருவேப்பிலங்குறிச்சி கவுன்சிலர் மலர்முருகனும் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து கவுன்சிலர்கள் 19 பேரும் வாக்களித்தனர். இதில் மலர் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் சேர்மன் செல்லத்துரை 3 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மலருக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமாரி, முருகன் முன்னிலையில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார். 

Tags : Vriddhachalam Union Committee ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை