ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்க தேர்தல்

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த எரும்பி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி  நீர் பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. அங்குள்ள தொடக்கப்  பள்ளியில் போலீசார் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் தேர்தல் நடத்தினர். காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய  தேர்தல் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சங்கரன் என்பவர் தேர்தல் தேதி  முறையாக அறிவிக்காமல் தேர்தல் நடத்துவதாக தேர்தல் அலுவலர்களுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்  இரண்டு மணி நேரம் வாக்குப் பதிவு   தடைப்பட்டது.   போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி காலை 9  மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. விவசாயிகள் ஆர்வத்துடன் வாக்குப் பதிவு  செய்தனர்.

மதியம் 2 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்து வாக்கு  பெட்டிக்கு சீல்வைக்கப்பட்டு ஆர்.கே.பேட்டை தாசில்தார் அலுவலகத்தில்தாசில்தார் தமயந்தி முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது.   தலைவராக திமுகவை சேர்ந்த  பொன்னுரங்கம் வெற்றி பெற்றார்.

Related Stories: