×

நரிக்குடி அருகே களைகட்டிய ஜல்லிக்கட்டு 250 காளைகள் பங்கேற்பு

காரியாபட்டி, மே 25: நரிக்குடி அருகே ஒட்டங்குளம் கிராமத்தில் அய்யனார், கருப்பணசாமி கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு 3 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. முன்னதாக மாடு பிடி வீரர்கள் அருப்புக்கோட்டை ஆர்டிஓ கல்யாண்குமார், இந்திய அரசின் விலங்குகள் பாதுகாப்புக் குழு உறுப்பினர் கே.எஸ்.மிட்டால், திருச்சுழி டிஎஸ்பி மதியழகன் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டு, ஜல்லிகட்டு துவங்கப்பட்டது. காளைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற காளை உரிமையாளர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 250 காளைகள் போட்டியில் பங்கேற்றன, காளைகள் மற்றும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் வெற்றிபெற்ற காளைகளுக்கும், காளையர்களுக்கும் சைக்கிள், பீரோ, ரொக்கப்பரிசு வெள்ளி, தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இப்போட்டியை முன்னிட்டு திருச்சுழி டிஎஸ்பி மதியழகன் தலைமையில் 450க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருச்சுழி, நரிக்குடி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், இந்த ஜல்லிக்கட்டு போட்டியைக் கண்டுகளித்தனர்.

Tags : Jallikkattu ,Narikkudi ,
× RELATED விருதுநகர் அருகே லாரி மோதி போலீசார் உயிரிழப்பு