அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தாயார் நினைவுநாள் கட்சியினர் பொதுமக்கள் அஞ்சலி

திருப்புத்தூர், மே 25: திருப்புத்தூர் அருகே அரளிக்கோட்டையில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தாயாரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கட்சியினரும், கிராமத்துப் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், திமுக சிவகங்கை மாவட்ட செயலாளருமான கே.ஆர்.பெரியகருப்பனின் தாயார் கரு.கருப்பாயி அம்மாளின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை அரளிக்கோட்டையில் உள்ள இல்லத்தில் அவரது திருவுருவ படத்திற்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், அவரது மனைவி பிரேமா பெரியகருப்பன், மகன் டாக்டர் கோகுலகிருஷ்ணன், மருமகள் டாக்டர் பாருபிரியதர்ஷினி மற்றும் பேரன்கள் பெரியகருப்பன் என்ற அர்ஜூன்கிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன் என்ற அத்வைத் உள்ளிட்ட குடும்பத்தினர் மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சேங்கைமாறன், ஜோன்ஸ் ரூசோ, மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி, திருப்புத்தூர் யூனியன் சேர்மன் சண்முகவடிவேல், திருப்புத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன், துணைத்தலைவர் கான்முகமது, மாவட்ட விழிப்பு கண்காணிப்பு குழு உறுப்பினர் கே.எஸ்.நாராயணன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சாமிக்கண்ணு, மானாமதுரை சேர்மன் மாரியப்பன் கென்னடி, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கிராமப்பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மலரஞ்சி செலுத்தினர். மேலும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Stories: