திருவாடானை அருகே அன்னை தெரசா ஆலய திருவிழா

திருவாடானை, மே 25:  திருவாடானை அருகே புனித அன்னை தெரசா ஆலய திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவாடானை அருகே மணவாளன்வயல் கிராமத்தில்a அன்னை தெரசா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. விழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நாட்டில் நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும், அமைதி நிலவிட வேண்டியும் அருட்தந்தை ஞானதாசன் திருப்பலி நடத்தினார். விழாவில் சுற்றுவட்ட கிராமமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.

Related Stories: