வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி எம்பி, எம்எல்ஏ வழங்கினர்

பரமக்குடி, மே 25:  பரமக்குடி வட்டாரம் தெளிசாத்தநல்லூர் ஊராட்சி வளையனேந்தல் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் துவக்கி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், நகர்மன்றத் தலைவர் சேது கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விசைத் தெளிப்பான், கைத்தெளிப்பான், தென்னங்கன்றுகள், உளுந்து விதைகள், காய்கறி விதைகள், பழங்கன்றுகளை வழங்கினார்கள். மேலும், தொகுப்பு திடலுக்கு ஆழ்குழாய் கிணறு அமைக்க செயல்முறை ஆணைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தெளிசாத்தநல்லூர் பஞ்சாயத்து தலைவர் சுமதி பாலசுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் சேதுபதி, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை தலைவர் சந்திரசேகர், வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் கண்ணையா, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு )நாகராஜன், வேளாண்மை உதவி இயக்குநர்  ராஜேந்திரன், விதை ஆய்வாளர் ஜெயந்தி மாலா, தோட்டக்கலை உதவி இயக்குநர் அனுசுயா, உதவி தோட்டக்கலை அலுவலர் தனலெட்சுமி, வேளாண்மை பொறியியல் துறை பொறியாளர் செல்வகுமார், கால்நடை உதவி இயக்குநர் முத்துசாமி மற்றும் கால்நடை உதவி மருத்துவர் எமனேஸ்வரம் வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: