வங்கி தேர்வில் தமிழ் புறக்கணிப்பு ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை, மே 25: வங்கி தேர்வில் தமிழை புறக்கணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மதுரையில் நேற்று, திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வங்கிகளில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், இத்தேர்வுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரையில் க்ரைம் பிராஞ்ச் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி தலைவர் சிவா தலைமை வகித்தார். செயலாளர் கண்ணன், அமைப்பாளர் வேல்துரை முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் செல்வம், தென்மாவட்ட பிரச்சாரக் குழு தலைவர் எடிசன்ராஜா, மாவட்ட ெசயலாளர் முருகானந்தம் ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கவுரை ஆற்றினர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர், வங்கித் தேர்வில் தமிழை புறக்கணிக்காதே, தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்காதே என்று, ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். திருமங்கலம் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் முத்துக்கருப்பன் தலைமை வகித்தார். இளைஞரணி செயலாளர் கணேசன், பாலா முன்னிலை வகித்தனர். மண்டலத் தலைவர் சிவகுருநாதன், மதிமுக நகர செயலாளர் அனிதா பால்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் சுப்புக்காளை பேசினர். நிகழ்ச்சியில் மதிமுக அவைத்லைவர் சிவனாண்டி, பொருள்ளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: