உடுமலை- குமரலிங்கம் சாலை மேம்பாட்டு பணி ஆய்வு

உடுமலை, மே 25: தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுப்பணி நடந்து வருகிறது. அதன்படி, மடத்துக்குளம் உட்கோட்டத்தில் மாவட்ட முக்கிய சாலையான உடுமலை- குமரலிங்கம் சாலை மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. இதை கோவை கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, ஈரோடு கோட்டப் பொறியாளர் வத்சலா வித்தியானந்த், தாராபுரம் கோட்ட பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவி கோட்ட பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories: