இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை தாலுகா மாநாடு

உடுமலை, மே 25: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை தாலுகா கமிட்டி மாநாடு உடுமலையில் நடந்தது. தலைமைக்குழு உறுப்பினர்கள் குருசாமி, நந்தகோபால், சித்ரா ஆகியோர் மாநாட்டை நடத்தினர். கட்சியின் புதிய தாலுகா செயலாளராக வி.சவுந்தர்ராஜன், துணை செயலாளராக நந்தகோபால், பொருளாளராக ரணதேவ், கமிட்டி உறுப்பினர்களாக சுப்பிரமணியம், ஆறுமுகம், மகேஸ்வரன், முத்துக்குமார், சித்ரா, ராகுல், ராஜேஸ்வரி, செல்வராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பழனிசாமி நிறைவுரை ஆற்றினார்.

மாநாட்டில், அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழலை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், கணக்கம்பாளையம் ஊராட்சியில் சீரான குடிநீர் விநியோகிக்க வேண்டும், பெரியகோட்டை பிரிவில் நகர பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், பெதப்பம்பட்டி நால்ரோட்டில் உள்ள மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: