×

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் மூழ்கிய நாட்டுப்படகை சீரமைக்க ஸ்டெர்லைட் நிதியுதவி

தூத்துக்குடி, மே 25: தூத்துக்குடி திரேஸ்புரம் குழந்தை தெரசம்மாள் தெருவை சேர்ந்த ரஹீம், தனக்கு சொந்தமான நாட்டுப்படகில் கடலுக்குள் சென்று சங்கு குளிக்கும் தொழிலை செய்து வந்தார். கடந்த 11ம் தேதி இவர், நாட்டுப்படகில் திரேஸ்புரத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். அவரோடு 11 மீனவர்களும் கடலுக்கு சென்றுள்ளனர். தூத்துக்குடி கடல் பகுதியில் இருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் ரஹீம்  படகு சென்று கொண்டிருந்த போது, அன்றைய தினம் அசானி புயல் காரணமாக பலத்த காற்று வீசி கடலில் அலையின் வேகம் அதிகரித்தது. இந்த நிலையில் கரை திரும்ப இருந்த நேரத்தில் கடலில் ஏற்பட்ட சீற்றத்தால் ரஹீம் மற்றும் 11 மீனவர்கள் சென்ற படகு கடலில் மூழ்க துவங்கியது. கடலுக்குள் தத்தளித்து கொண்டிருந்த ரஹீம் மற்றும் 11 மீனவர்களை சற்று தொலைவில் வேறொரு நாட்டுப்படகில் சென்ற மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். சில நாட்களுக்கு பிறகு கடலில் மூழ்கிய நாட்டுப்படகை மீட்டு திரேஸ்புரம் கடற்பகுதிக்கு கொண்டு வந்தனர். மேலும் படகு சேதமடைந்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ரஹீம், படகை சரிசெய்ய பணமின்றி தவித்துள்ளார். இதையறிந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனம் அளித்த நிதியுதவிக்கு சங்குகுளி மீனவர் ரஹீம், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். இத்தகவல் ஸ்டெர்லைட் நிறுவன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags : Mediterranean ,Thoothukudi ,
× RELATED துருக்கியில் கேபிள் கார் விபத்து 23 மணி...