கொசூர் கிராம சாலையில் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

திருச்சி, மே25: தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில், திருச்சி நபார்டு மற்றும் கிராம சாலைகள் வட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மணப்பாறை அருகே பொத்தப்பட்டி கொசூர் சாலை முதல் வையமலைப்பாளையம் வரை 3 கி.மீ. நீளத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையின் தரத்தை திருச்சி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டம் கண்காணிப்பு பொறியாளரும், உள் தணிக்கை அதிகாரியுமான முனைவர் கிருஷ்ணசாமி நேற்று ஆய்வு செய்தார். அப்போது கோட்ட பொறியாளர் வடிவேல், உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உடன் இருந்தனர். இந்த ஆய்வின்போது தரத்தை துல்லியமாக அறிய உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டது.

Related Stories: