×

கும்பகோணம் அருகே ஆடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் 44 பேருக்கு அடையாள அட்டை வழங்கல்

கும்பகோணம், மே 25: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் ஆடுதுறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் தலைமையிலும், பேரூராட்சி தலைவர் ஸ்டாலின் முன்னிலையிலும் குமரகுருபரர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதில் அரசு கொறடா கோவி.செழியன் மற்றும் மயிலாடுதுறை எம்.பி ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு தமிழக அரசால் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையை 44 பயனாளிகளுக்கு வழங்கினர். மேலும் இந்திய அரசாங்கத்தால் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிப்புத்துறையால் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்மார்ட் கார்டு பெற 76 நபர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு கண், எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை, மன நலம் உள்ளிட்டவைகளுக்கு உரிய மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் மற்றும் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்கள் ராஜா, சரவணன், கூகூர் ஊராட்சி தலைவர் அம்பிகாபதி, திருவிடைமருதூர் தாசில்தார் சந்தனவேல், பேரூராட்சி செயல் அலுவலர் சிவலிங்கம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சித்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Aaduthurai ,Kumbakonam ,
× RELATED கும்பகோணம் அரசு மருத்துவமனையில்...