வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம் திரவுபதை அம்மன் கோவில் தீமிதி திருவிழா

வேதாரண்யம், மே 25: வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம் சின்னதேவன்காடு திரவுபதை அம்மன் கோவில் தீ மீதி திருவிழா நடைபெற்றது. கடந்த 16ம் தேதி கணபதி ஹோமத்துடன் திருவிழா துவங்கி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து நாள்தோறும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் வீதியுலா நடைபெற்றது. பின்பு அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து துகில் தருதல் விராட பருவம், கிருஷ்ணன் தூது, அர்ச்சுனன் தபசு, அரவான் களப்பலி, படுகளம் நடைபெற்றது. பின்பு அம்பாள் புறப்பாடு நடைபெற்று தீ மீதி உற்சவம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு குண்டத்தில் இறங்கி தீமித்தனர். பின்பு பக்தர்கள் நேர்த்தி கடனாக மாவிளக்கு போட்டும், முடிகாணிக்கை செலுத்தியும் அர்ச்சனை செய்தும் அம்பாளை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: