புகளூர் நகராட்சியில் ரூ. 9கோடியில் தார் சாலை விரிவாக்கம், கழிவுநீர் வாய்க்கால் அமைக்க பூமிபூஜை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்

வேலாயுதம்பாளையம், மே.25: கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி வேலாயுதம்பாளையம் ரவுண்டானாவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேலாயுதம்பாளையம்- நொய்யல் நெடுஞ்சாலையில் கந்தம்பாளையம் வரை தார் சாலை விரிவாக்கம் செய்து இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைத்தல் மற்றும் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர்களை அகற்றி புதிதாக தடுப்பு சுவர்கள் கட்டும் பணிக்காக ரூ.9 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. பூமி பூஜை விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார் .புகழூர் நகராட்சித் தலைவர் நொய்யல் சேகர் என்கிற குணசேகரன், எம்எல்ஏ இளங்கோ, நகராட்சி கமிஷனர் கனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு ரூ கோடியே 9 கோடியை 8 லட்சம் மதிப்பீட்டிலான தார்சாலை , தார் சாலையில் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் மற்றும் தார் சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றி புதிதாக தடுப்பு சுவர் கட்டும் பணிக்கான பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். விழாவில் புகழூர் நகராட்சி துணைத்தலைவர் பிரதாபன் மற்றும் நகராட்சிவார்டு கவுன்சிலர்கள், நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் ரவிக்குமார் , துணை பொறியாளர் கர்ணன் கலந்து கொண்டனர்.

Related Stories: