திருப்போரூர் வட்டத்தில் மே 31 முதல் ஜூன் 8 வரை ஜமாபந்தி நடைபெறும்

திருப்போரூர்: திருப்போரூர் வட்டாட்சியர் ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை. திருப்போரூர் வட்டத்தில் திருப்போரூர், நெல்லிக்குப்பம், கரும்பாக்கம், கேளம்பாக்கம், மானாம்பதி, பையனூர் ஆகிய குறுவட்டங்கள் உள்ளன. இதில், வரும் 31ம் தேதி முதல் ஜூன் 8ம் தேதி வரை வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில், திருப்போரூரில் 31ம் தேதி, 1ம் தேதி நெல்லிக்குப்பம், 2ம் தேதி கரும்பாக்கம், 3ம் தேதி கேளம்பாக்கம், 7ம் தேதி மானாம்பதி, 8ம் தேதி பையனூரில் நடக்கிறது. எனவே, அந்தந்த குறுவட்டத்தில் அடங்கிய கிராம மக்கள், தங்களது பட்டா பெயர் மாற்றம், பெயர் திருத்தம், குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் உள்பட வருவாய்த்துறை சார்ந்த பணிகளை மேற்கொண்டு பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: