வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் ராணுவ பணிகளுக்கான ஊக்குவிப்பு முகாம்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், ராணுவ பணிகளுக்கான ஊக்குவிக்கும் முகாம் இன்று நடக்க உள்ளது என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில், மே மாதத்தில் இந்திய ராணுவ பணிகளுக்கான ஊக்குவிக்கும் முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் சார்பில், இன்று காலை 10 மணிக்கு செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,  இப்பணிகளுக்கான ஊக்குவிப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தைச் சார்ந்த ராணுவத்தில் பணியாற்ற விருப்பம் உள்ள இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: