×

வயதான தம்பதி தற்கொலை

பொன்னேரி:  பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் அம்பேத்கர் நகர் குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயராமன்(70), இவரது மனைவி ராஜம்மாள்(60), இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணமாகி தனித்தனியே வசித்து வரும் பிள்ளைகள் தாய், தந்தை செலவுக்கு பணம் கொடுத்து அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு செல்வதாக கூறப்படுகிறது. கொத்தனாராக பணியாற்றி வந்த ஜெயராமன் கடந்த சில வருடங்களுக்கு முன் பக்கவாதம் ஏற்பட்டு வீட்டிலேயே முடங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று திடீரென ராஜம்மாள் தானும் தன்னுடைய கணவரும் விஷமருந்தி விட்டதாக அவரது மகனுக்கு செல்போனில் தகவல் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் அவரது அக்கா சரஸ்வதிக்கும், அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது ஜெயராமன் இறந்த நிலையில் கிடந்தார். ராஜம்மாள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த பொன்னேரி போலீசார் தம்பதியர் இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் ஜெயராமனுக்கு பக்கவாதத்தால் ஏற்பட்ட மன உளைச்சலில் தம்பதியர் தற்கொலை செய்தது தெரியவந்தது….

The post வயதான தம்பதி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Bonneri ,Ponneri ,Thadapperumbakkam Ambedkar Nagar ,Jayaraman ,Rajammal ,
× RELATED பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட...