×

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் தொடர்ந்து வெளியேறும் கரும்புகை மற்றும் துகள்கள்: பொதுமக்கள் அவதி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான இரும்பு உருக்காலை மற்றும் மின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆகும். இதிலிருந்து தினந்தோறும் நச்சுப்புகை வெளியேற்றுகின்றன. இதனால் அதனை சுற்றியுள்ள பாப்பன்குப்பம், சித்தராஜ் கண்டிகை, சிறுபுழல்பேட்டை, புது கும்மிடிப்பூண்டி, கோபால்ரெட்டி கண்டிகை, பழம்பாளையம், நாகராஜ் கண்டிகை, பெரிய ஒபுளாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள பெரியோர் முதல் சிறியோர் வரை மூச்சுத்திணறல், வயிற்று வலி மற்றும் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்படுகின்றனர்.

மேலும் காற்று மாசு பற்றி கடந்த மாதம் இந்த பகுதிகளில் கருவிகள் பொருத்தப்பட்டு அதன் அறிக்கையில் இப்பகுதியில் காற்றில்  துகள்கள் அதிகம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பாப்பன்குப்பம் பகுதியில் பிர்லா கார்பன் மற்றும் இதர ஆலையில் இருந்து கருப்பு துகள்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், குடியிருப்பு வாசிகள் மற்றும் குழந்தைகள் மீது படிவதால் அவர்கள் கடும் அவதியடைகின்றனர். கண்ணுக்குத் தெரியாமல் காற்றில் பறந்து வயிற்றுக்குள் போவதால் பல்வினை நோய்களும் உண்டாகின்றன. எனவே, இப்பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...