×

அவிநாசி, காங்கயத்தில் இன்று முதல் ஜமாபந்தி

காங்கயம், மே 24: காங்கயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், தாராபுரம் கோட்டாட்சியர் குமரவேல் தலைமையில் நடைபெறவுள்ள ஜமாபந்தி நிகழ்ச்சியில், காங்கயம் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை, தங்கள் கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாட்களில் வருவாய்த் தீர்வாய அலுவலரிடம் நேரில் கொடுத்து, தீர்வு பெறலாம் என காங்கயம் வட்டாட்சியர் ஜெகதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.வருவாய்த் தீர்வாயம் நடைபெறும் நாள்களும், அதில் கோரிக்கை மனுக்கள் பெறப்படவுள்ள கிராமப் பகுதிகளும் பின்வருமாறு :மே 24ம் தேதி (செவ்வாய்க்கிழமை) : காங்கயம் உள்வட்டத்தைச் சேர்ந்த கத்தாங்கண்ணி, கணபதிபாளையம், படியூர், சிவன்மலை, காங்கயம், வீரணம்பாளையம், வட்டமலை, காடையூர். மே 25ம் தேதி (புதன்கிழமை) : ஊதியூர் உள்வட்டதைச் சேர்ந்த ஆரத்தொழுவு, வட சின்னாரிபாளையம், சம்மந்தம்பாளையம், காங்கயம்பாளையம், குருக்கபாளையம், நெழலி, ஊதியூர், முதலிபாளையம். மே 26 (வியாழக்கிழமை) : நத்தக்காடையூர் உள்வட்டதைச் சேர்ந்த மறவபாளையம், கீரனூர், பாப்பினி, நால்ரோடு, பரஞ்சேர்வழி, மருதுறை, நத்தக்காடையூர், முள்ளிப்புரம், குட்டப்பாளையம், பழையகோட்டை.

மே 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) : வெள்ளகோவில் உள்வட்டதைச் சேர்ந்த முத்தூர், சின்ன முத்தூர், ஊடையம், மங்கலப்பட்டி, வேலம்பாளையம், பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகள்.சேனாபதிபாளையம், வெள்ளகோவில், உத்தமபாளையம், லக்கமநாயக்கன்பட்டி, வீரசோழபுரம், வள்ளியரச்சல் ஆகிய பகுதிகள் நடைபெறுகிறது.அதேபோல அவிநாசி தாலுகா அலுவலகத்தில் நடைபெற உள்ளஜமாபந்தி நடைபெறும் விவரம்: மே24ம் தேதி சேவூர் உள்வட்டம் : பொங்கலூர், ஆலத்தூர், மங்கரசவலையபாளையம், குட்டகம், போத் தம்பாளையம், புலிப்பார், தத்தனூர், புஞ்சைத்தாமரைக்குளம், வடுகபாளையம், பாப்பாங்குளம், சேவூர், கானூர். ஆகிய கிராமங்களிலும், மே 25ம் தேதி அவிநாசி மேற்கு  : ராமநாதபுரம் வேட்டுவபாளையம், உப்பிலிபாளையம். தெக்கலூர், செம்பியநல்லூர், வேலாயுதம்பாளையம், புதுப்பாளையம் வடக்கு. நம்பியாம்பாளையம், கருவலூர் ஆகிய கிராமங்களிலும், மே 26ம் தேதி அவிநாசி கிழக்கு: கணியாம்பூண்டி, இராக்கியாபாளையம், பழங்கரை, கருமாபாளையம், சின்னேரிபாளையம் நடுவச்சேரி, பெருமாநல்லூர் உள்வட்டம்ஆகிய கிராமங்களிலும், மே 27ம் தேதி: ஈட்டிவீரம்பாளையம், தொரவலூர், மேற்குப்பதி, சொக்கனூர், பட்டம்பாளையம், வள்ளிபுரம், பெருமாநல்லூர். இதில், பொதுமக்கள் தங்களதுகோரிக்கைகளை நேரடியாக மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் மனுக்களாக கொடுத்து உடனடியாக தீர்வு காணலாம். என அவிநாசி தாசில்தார் ராகவி தெரிவித்துள்ளார்.

Tags : Avinashi ,Jamabandhi ,Kangayam ,
× RELATED மருதுறை ஊராட்சியில் குடிநீர் குழாய்,...