டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

ஊட்டி, மே 24: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஊட்டி வட்டார கிளையின் சார்பில் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. ஊட்டியில் உள்ள சேரிங்கிராஸ் தேவாங்கர் மண்டபத்தில் மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசியர்கள் மற்றும் சிறந்த விருது பெற்ற பள்ளி, ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் 2019ம் ஆண்டு ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் சிறை சென்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. வட்டார தலைவர் ரேவதி தலைமை வகித்தார்.

மாநில துணைத் தலைவரும் நீலகிரி மாவட்ட செயலாளருமான அண்ணாதுரை முன்னிலை வகித்தார். ஊட்டி வட்டார செயலாளர் குமார் வரவேற்றார். விழாவில் விருது பெற்ற ஆசிரியர்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் சிறை சென்ற ஆசிரியர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. ேமலும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களையும் பாராட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், ஏராளமான ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர். முடிவில், வட்டார பொருளாளர் ரமேஷ்குமார் நன்றி தெரிவித்தார்.

Related Stories: