காரையூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பொன்னமராவதி,மே 24: பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. இக்கோயில் திருவிழா கடந்த 16ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் திருவிழா தொடங்கியது. அன்றே சுவாமிக்கு காப்புக்கட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து தினசரி மண்டகப்படி நடைபெற்று சுவாமி வீதிவுலா சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் 22ம் தேதி பொங்கல் விழா நடந்தது. இந்த கோயிலின் முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. தேரை காரையூர் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதிவழியாக சென்று வந்தது. காரையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: