கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விழிப்புணர்வு பிரசாரம்

கரூர், மே 24: கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. கரூர் பேரூந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். நிகழ்வில், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜலிங்கம், முதன்மை சார்பு நீதிபதி கோகுல்முருகன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் குறித்தான தெருக்கூத்து நிகழ்வு தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மூலம் நடத்தப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாக்கியம் நன்றி கூறினார்.

Related Stories: