சிவத்தையாபுரத்தில் நாளை வை. ஒன்றிய திமுக செயலாளர் பிஜி ரவி இல்லத் திருமண விழா

ஏரல், மே 24: வைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிஜி ரவி இல்லத் திருமண விழா, நாளை (புதன்கிழமை) சிவத்தையாபுரத்தில் நடக்கிறது. வைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிஜி ரவி - கலைச்செல்வி தம்பதியரின் மகள் மோனிஷாவுக்கும், தென்காசி மாவட்டம் ஆலடிப்பட்டி துரைச்சாமி - மரியதேன்மொழி தம்பதியரின் மகள் அருணனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமண விழா, நாளை (25ம் தேதி) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சிவத்தையாபுரம் கேஎஸ்விஏ திருமண மண்டபத்தில் நடக்கிறது. விழாவிற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார்.

எம்எல்ஏக்கள் வைகுண்டம் ஊர்வசி அமிர்தராஜ், ஓட்டப்பிடாரம் சண்முகையா, மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ராஜேஷ் ரவிசந்தர் வரவேற்கிறார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி எம்பி கனிமொழி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். நிகழ்ச்சியில் மருத்துவரணி துணை செயலாளர் வெற்றிவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரம்மசக்தி, பூபதி, ஜெயக்குமார் ரூபன், மீனவர் அணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், துணை செயலாளர்கள் பெல்ஸி, வக்கீல் ஆறுமுகப்பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் சொர்ணகுமார் உட்பட திமுக நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்குகின்றனர். திருமண விழாவிற்கு வருகை தருபவர்களை மணமகளின் பெற்றோர் வை. கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிஜி ரவி - கலைச்செல்வி தம்பதியினர் மற்றும் மணமகளின் சகோதரர் ஆனந்தபிரபு ஆகியோர் வரவேற்கின்றனர்.

Related Stories: