சைபர் க்ரைம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்ட பணம், செல்போன்கள் உரியவர்களிடம் எஸ்பி ஒப்படைத்தார்

கரூர், மே 21: கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சைபர் க்ரைம் போலீசார்களால் கண்டுபிடிக்கப்பட்ட செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆன்லைன் மோசடி, பேக் ஐடி மூலம் பணம் திருட்டு போன்ற பல்வேறு செயல்பாடுகள் மூலம் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டு வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும் சமயத்தில் அதனை கண்டுபிடிக்கும் வகையில் கரூர் மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் சைபர் க்ரைம் ஆரம்பிக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் கலந்து கொண்டு, ஆன்லைன் மூலம் மோடியாக திருடப்பட்ட ரூ. 1 லட்சத்து 11ஆயிரத்து, 399 ரூபாய் பணத்தை, உரியவர்களிடம் ஒப்படைத்தார். மேலும், கரூர் மாவட்டத்தில் செல்போன் மாயம் மற்றும் திருடு போனது போன்ற புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீசார், ரூ.24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 125 செல்போன்களை மீட்டுள்ளனர். அதனையும், பொதுமக்களிடம் மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் ஒப்படைத்தார். இந்த நிகழ்வில் ஏடிஎஸ்பி கீதாஞ்சலி உட்பட அனைத்து போலீசார்களும் கலந்து கொண்டனர்.

Related Stories: