வருஷாபிஷேக விழா: சாயர்புரம் கூட்டுறவு வங்கியில் கடன் வழங்கும் முகாம்

ஏரல், மே 21: சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன், விவசாய கடன், சிறுபான்மையினருக்கு கடன் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் உட்பட கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வங்கி தலைவர் அறவாழி தலைமை வகித்து ரூ.34 லட்சத்து 43 ஆயிரம் கடனுதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி பேசினார்.

கள அலுவலர் சேஷகிரி, வங்கி செயலாளர் சகுந்தலாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையும் நடந்தது. வங்கி பணியாளர்கள் கிருபாகரன், வெங்கடாசல பெருமாள், ஆனந்தராஜ் மற்றும் வங்கி நிர்வாக குழு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: