நெல்லை மாவட்டத்தில் விஷம் குடித்து 3 பேர் பலி

நெல்லை,மே 21: நெல்லை மாவட்டத்தில் விஷம் குடித்து 3 பேர் பலியாகினர். நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள ெவங்கலபொட்டல் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் சிங்ககுட்டி (39). இவருக்கு வலிப்பு நோய் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 18ம்தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திசையன்விளை அயன்குளம் தங்கம்மாள்புரம் சக்தி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் துரைபழம் (65) டிரைவர்.

இவர் உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 18ம்தேதி விஷம் குடித்து தற்கொலை செய்தார். இதுகுறித்து திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னீர்பள்ளம் அடுத்துள்ள தெற்குகாரசேரியை சேர்ந்தவர் மாரியப்பன் (50). இவருக்கு வயிற்று வலி இருந்துள்ளது. இதனால் அவதிப்பட்டுவந்தவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரை நடத்தி வருகின்றனர்.

Related Stories: