நெல்லையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

கேடிசி நகர், மே 21: கர்நாடகாவில் பெண் வக்கீல் சங்கீதா தாக்கப்பட்டதைக் கண்டித்து நெல்லையில் கோர்ட் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கர்நாடகாவில் பெண் வக்கீல் சங்கீதா தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வக்கீல்கள் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றக் கோரியும், மத்திய, மாநில அரசுகைள வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வக்கீல்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நெல்லை வக்கீல் சங்கம் சார்பில் கோர்ட் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்கத் தலைவர் ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். செயலாளர் காமராஜ், உதவி செயலாளர் பாசறை பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் உதவி செயலாளர் மணிகண்டன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜபிரபாகரன், வக்கீல்கள் ஜெனி, அமல்ராஜ், பழநி, மகேஷ், மீரான், சுசீலா உள்பட பலர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: