கால்பந்து சிறப்பு பயிற்சி முகாம்

விருத்தாசலம், மே 21: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விருத்தாசலம் மினி விளையாட்டு  அரங்கில் கால்பந்து கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் இன்று (21ம் தேதி) முதல் ஜூன் 4ம் தேதி வரை 15 நாட்களுக்கு நடக்கிறது. கால்பந்து விளையாட்டின் நுணுக்கங்கள் சிறந்த  பயிற்றுனர் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வுத் தேர்வு நடைபெற்று வருகிறது.

இதில்  50 மீட்டர், 800 மீட்டர், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், 6x10 ஷட்டில்  ரன் உள்ளிட்டவைகளுக்கு போட்டி நடத்தப்பட்டு விளையாட்டுத் திறன்  கண்டறியப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளின் விளையாட்டுத் திறனை  வளர்த்துக் கொள்ளலாம் என கால்பந்து  பயிற்றுநர் தெரிவித்துள்ளார்.

Related Stories: