முதல்வருடன் செல்பி எடுத்த பெண்கள்: சாலையோர கடைகளில் காய்கறி விற்பனை அதிகரிப்பு

ஊட்டி,  மே 21: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களை கட்ட துவங்கியுள்ள நிலையில்,  சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான  மலர் கண்காட்சி துவங்கியுள்ள நிலையில் மழை பெய்து வருவதால் குளு குளு  காலநிலையை அனுபவித்த படியே சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.  ஊட்டிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் இங்கு கிடைக்க கூடிய நீலகிரி தைலம்,  தேயிலை தூள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். இதனால் ஊட்டி  நகரில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் கூட்டம் காணப்படுகிறது.

சுற்றுலா  பயணிகளுக்காகவே சிலர் சாலையோரங்களில் கேரட், பீட்ரூட், முட்டைகோஸ்  ேபான்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். அவர்களிடம் சுற்றுலா பயணிகள்  ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக மார்க்கெட்டைவிட விலை  குறைவாகவும், பிரஷ்ஷாகவும் கிடைப்பதால் அதிகளவு வாங்கி செல்கின்றனர்.  இதனால் ஊட்டி - கோத்தகிரி சாலை, தொட்டபெட்டா செல்லும் சாலைகளில் சாலையோர  காய்கறிகள் வியாபாரம் அமோகமாக நடக்கிறது. இதனால் சிறு விவசாயிகளுக்கு  வருமானமும் கிடைத்து வருகிறது.

Related Stories: