×

திமுகவில் இணைந்த அதிமுகவினர்

போடி, மே 21: போடி அருகே உள்ள ராசிங்காபுரம் அதிமுக கிளைச்செயலாளரும், ராசிங்காபுரம் கிராம முன்னாள் ஊராட்சி தலைவருமான ஜெகநாதன் தலைமையில், அதிமுகவைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர், தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி தங்கத்தமிழ்ச்செல்வன் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ராசிங்காபுரம் கிராம ஊராட்சி தலைவர் பொன்னம்பலம், ராசி செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,DMK ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...