×

சீலையம்பட்டியில் 18 ஆண்டுகளுக்கு முன் இறந்த மகன் சாவில் மர்மம் என புகார்: குடும்பத்தினர் சாலை மறியல்

சின்னமனூர், மே 21: சின்னமனூர் அருகே, சீலையம்பட்டி பி.டி.ஆர் காலனியைச் சேர்ந்த காசிம். விவசாயி. இவரது மகன் ராஜா முகமது (26), ஜேசிபி டிரைவர். இவர், கடந்த 2004ல் குளத்தில் இறந்து கிடந்தார். சின்னமனூர் போலீசார் ராஜா முகமது குளத்தில் விழுந்து தற்கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், ராஜா முகமதுவின் குடும்பத்தார் தங்களது மகனை குறிப்பிட்ட 5 பேர் கொலை செய்து குளத்தில் மூழ்கடித்தனர் என போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக பலமுறை புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தின்ம காசிம் தலைமையில், அவரது உறவினர்கள், 18 ஆண்டுகளுக்கு முன் இறந்த ராஜா முகமதுவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. குறிப்பட்ட சிலர் கொலை செய்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீலையம்பட்டி அம்பேத்கர் சிலை அருகே, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சின்னமனூர் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். மேலும், புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.

Tags : Seelayampatti ,
× RELATED பனியன் நிறுவன அறையில் கட்டிங் மாஸ்டர் தற்கொலை