×

கலெக்டர் எச்சரிக்கை: கோபி வருவாய் கோட்டத்தில் ஓராண்டில் 1190 பழங்குடியினருக்கு சாதிச்சான்று விநியோகம்

ஈரோடு,மே21: ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 1190 பழங்குடியினருக்கு சாதிச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், ஆசனூர்,தாளவாடி,கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதில் கடந்த காலங்களில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளில் மலைவாழ் மாணவர்கள் உரிய இட ஒதுக்கீடு கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியினர் சாதிச்சான்று கேட்டு விண்ணப்பித்தால் காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டதையடுத்து கடந்த ஓராண்டில் மட்டும் 1190 பேருக்கு சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, சமவெளிப்பகுதிகளை போல மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மலைக்கிராமங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இதன்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் அந்தியூர் அருகே உள்ள கத்திரிப்பட்டி வன எல்லை பகுதியில் 8 சாலைப்பணிகள் 121 கி.மீ நீளத்தில் ரூ.2, கோடியே 88 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டிலும், 2 சிறுபாலங்கள் அமைக்கும் பணிகள் ரூ.68.41 லட்சத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வெள்ளித்திருப்பூர் ஊராட்சியில் 31 கி.மீ நீளத்தில் ரூ.66 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டில் மலைப்பகுதி கிராமங்களை இணைக்கும் இணைப்புச்சாலை பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பர்கூர் ஊராட்சி ஒன்னக்கரை முதல் முத்தூர் வனச்சாலை வரை ரூ.41 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் ஊரக இணைப்புச்சாலை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோபி வருவாய் கோட்டத்தில் 1190 பேருக்கு பழங்குடியினர் சாதிச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

Tags : Kobe ,
× RELATED கோபி, சுதாகரின் அடுத்த அதிரடி; “கோடியில் இருவர்” வெப் சீரிஸ்