×

வடமதுரை யூனியன் ஊராட்சிகளில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு

வடமதுரை, மே 21: வடமதுரை யூனியனுக்கு உட்பட்ட தென்னம்பட்டி, கொம்பேரிபட்டி சிங்காரக்கோட்டை, காணப்பாடி, பாடியூர், குளத்தூர் ஆகிய ஊராட்சிகளில் ரூ.80 லட்சம் மதிப்பில் 8 அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அங்கன்வாடி மையக் கட்டிடங்களை வேடசந்தூர் தொகுதி எம்.எல்.ஏ காந்திராஜன் திறந்து வைத்தார். இதில், கரூர் எம்பி ஜோதிமணி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில், ‘ஒன்றிய குழு தலைவர் தனலட்சுமி பழனிச்சாமி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் தனலட்சுமி கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன், ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெள்ளையன், பரமேஸ்வரி, சுப்பிரமணி, ஈஸ்வரி, ராஜசேகர், விஜயலட்சுமி, ஸ்ரீரங்கம்மாள், செந்தில் மணி, முனியம்மாள், மோகன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் திமுக வடமதுரை ஒன்றியச் செயலாளர் சுப்பையன், நகரச் செயலாளர் கணேசன், அய்யலூர் பேரூராட்சி தலைவர் கருப்பன், துணைத்தலைவர் செந்தில் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.   

கரூர் எம்பி ஜோதிமணி பேசுகையில், ‘குழந்தை திருமண தடுப்பு குறித்து மலைக்கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் மருத்துவ சேவை முறையை மக்களிடம் எடுத்துரைத்தார். மேலும், பாராளுமன்ற உறுப்பினரின் நலத்திட்டத்தின் கீழ், ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பிலான மருத்துவப்பணிகள் செய்திருப்பதாக தெரிவித்தார். வேடசந்தூர் எம்.எல்.ஏ காந்திராஜன் பேசுகையில், ‘தமிழக முதல்வரின் சத்துணவு திட்டத்தை மக்களிடம் எடுத்துரைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள பள்ளி குழந்தைகளுக்கு காலை பால் மற்றும் உணவு வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

Tags : New Anganwadi Building ,Union Pancs ,Vidamadurai ,
× RELATED டி.புதுப்பட்டியில் புது அங்கன்வாடி...