வயதை மறைத்து திருமணம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது: போக்சோவில் கணவன் கைது

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (29). அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், மதுராந்தகம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இதையடுத்து, சதீஷ்குமார் தனது மனைவியுடன் முகப்பேரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான அந்த இளம்பெண்ணுக்கு கடந்த 13ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. உடனே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

மருத்துவமனை நிர்வாகம் இளம்பெண்ணின் ஆதார் அட்டையை பதிவு செய்தபோது, அவருக்கு 17 வயது என்பது தெரியவந்தது. இதுபற்றி குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து, அப்பெண்ணிடம் விசாரித்தனர். இதில், 16 வயது இருக்கும்போதே, வயதை மறைத்து சிறுமிக்கு திருமணம் நடந்தது தெரியவந்தது. இதுபற்றி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார், சதீஷ்குமாரை பிடித்து விசாரித்தனர். அப்போது, ‘‘திருமணமாகும்போது சிறுமியின் வயதை மறைத்து தனக்கு திருமணம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து புழல் சிறைச்சாலையில் அடைத்தனர்.

Related Stories: