திருவள்ளூர் ஒன்றிய குழு கூட்டம்

திருவள்ளூர், மே 21: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அலுவலகத்தில் உள்ள மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு துணை தலைவர் எம்.பர்கத்துல்லா கான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீ.காந்திமதிநாதன், ரா.வெங்கடேசன், மேலாளர் ராம் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டி.தென்னவன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ், கே.விமலாகுமார், எல்.சரத்பாபு, டி.கே.பூவண்ணன், டி.சாந்தி தரணி, கே.ஆர்.வேதவல்லி சதீஷ்குமார், வ.ஹரி, தி.கிருபாவதி தியாகராஜன், ஆர்.திலீப்ராஜ், அ.நவமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் 15வது நிதிக்குழு மானியம் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் ஒன்றியத்திற்கு உட்பட்ட 18 ஒன்றிய குழு உறுப்பினர்களின் பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: