×

வடசென்னை அனல் மின் நிலையத்தில் உதவி பொறியாளர் மர்மசாவு உறவினர்கள் போராட்டம்: கொலையா என போலீசார் விசாரணை

பொன்னேரி,: காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(36), வடசென்னை அனல்மின் நிலைய 2வது நிலையில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இளவரசி என்ற மனைவியும், ஹேமத், அரவிந்தன் என்ற 2 மகன்கள் உள்ளனர். ஹரிகிருஷ்ணன் அனல்மின் நிலைய அதிகாரிகளின் அரசு குடியிருப்பில் தங்கி வேலை பார்த்துக்கொண்டு வார இறுதி நாட்களில் மட்டும் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அனல் மின் நிலையத்தில் இருந்து அதிகாரிகள் ஹரிகிருஷ்ணனின் மனைவிக்கு போன் செய்து ஹரிகிருஷ்ணன் வீட்டிற்கு வந்தாரா என கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த இளவரசி `வேலைக்கு தானே சென்றார். அவர் வீட்டில் இல்லை’ என்றார். பின்னர் உடனடியாக அனல் மின் நிலையத்திற்கு வந்து கேட்டுள்ளார். அப்போது, நேற்று முன்தினம் வேலைக்கு வந்தவர் திடீரென காணமால் போனதாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் அனல் மின்நிலைய வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, ஹரிகிருஷ்ணன் அனல் மின் நிலையத்தில் 2வது மாடியில் இருந்து தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அவர் எழுதிய கடிதத்தில், `பணிச்சுமையின் காரணமாக மன அழுத்தம் தாங்காமல் இங்கு மேற்கொண்டு பணியினை தொடர முடியவில்லை. எனது குடும்பத்தை விட்டு பிரிகிறேன். இதற்கு யாரும் காரணம் இல்லை’ என எழுதியிருந்ததாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இந்த கடிதத்தில் இருப்பது ஹரிகிருஷ்ணன் கையெழுத்து கிடையாது என அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். மேலும் அனல்மின் நிலைய படிக்கட்டுகளில் ஆங்காங்கே ரத்த கறை இருப்பதாகவும், பொறியாளரை அடித்து கொன்று விட்டு தூக்கில் மாட்டிவிட்டதாகவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.  புகாரின்படி மீஞ்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Assistant Engineer ,Marmasavu ,North Chennai Thermal Power Station ,
× RELATED வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது...