தொழிலாளர் நலத்துறை சோதனை கடைகளில் முத்திரையிடாத 24 மின்னணு தராசுகள் பறிமுதல்

திருவாரூர், மே 20: திருவாரூர் நகரில் தொழிலாளர் நலத்துறையினர் நடத்திய சோதனையில் முத்திரையிடப்படாத 24 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவாரூர் நகரில் காய்கறி கடைகள், பழக்கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் புழக்கத்தில் இருந்து வரும் மின்னணு தராசுகளில் அரசு முத்திரை இடப்பட்டு உள்ளதா என நேற்று தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன் தலைமையில் திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர்.

அப்போது பல்வேறு கடைகள் மற்றும் தள்ளு வண்டிகளில் இருந்து முத்திரையிடப்படாத 23 மின்னணு தராசுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 24 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உதவி ஆணையர் பாஸ்கரன் தெரிவித்தார். இதுபோன்று முத்திரையிடப்படாத தராசுகள் சோதனை செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்படும் என்பதால் வியாபாரிகள் தங்களது தராசுகளை தொழிலாளர் நல அலுவலகத்தில் அரசு முத்திரையிட்டு பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்வதாக மேலும் அவர் கூறினார்.

Related Stories: