பேராவூரணி அரசு கல்லூரியில் முத்தமிழ் பயிலரங்கம்

பேராவூரணி, மே 20: பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் இணைந்து நடத்திய முத்தமிழ் பயிலரங்கம் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தனராஜன் தலைமை வகித்தார். பேராசிரியர் ராணி வரவேற்றார். பேராசிரியர்கள் ஞானசேகரன், ராஜ்மோகன் முன்னிலை வகித்தனர். இயற்றமிழ் என்ற தலைப்பில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் காமராசு, இசைத்தமிழ் என்ற தலைப்பில் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் சந்திரன், நாடகத்தமிழ் என்ற தலைப்பில் புதுச்சேரி யாழ் அரங்கம் இயக்குனர் கோபி ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். பேராசிரியர் உமா நன்றி கூறினார்.

Related Stories: