வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்

பாபநாசம், மே 20: பாபநாசம் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 7 பயனாளிகளுக்கு பணி ஆணை நகல் வழங்கும் விழா நடந்தது. செயல் அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றார். பேருராட்சி மன்ற தலைவர் பூங்குழலி கபிலன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பாபநாசம் தொகுதி எம்எல்ஏ., ஜவாஹிருல்லா கலந்து கொண்டு 7 பயனாளிகளுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணி ஆணையினை வழங்கினார். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் பரமசிவம், திமுக நிர்வாகிகள் அனிபா, துரைமுருகன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: