விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில் அனைத்து பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் பங்கேற்க நடவடிக்கை தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, மே 20: அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள்,முதுகலை ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில் பங்கேற்க தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பேசினார். அரசு ,அரசு உதவி பெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் 2 நாட்கள் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பேசியதாவது: 10ம் வகுப்பிற்கான விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 9ம் தேதி வரையும், 11ம் வகுப்பிற்கான விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் ஜூன் 10ம் தேதி முதல் ஜூன் 17ம் தேதி வரையும், 12ம் வகுப்பிற்கான விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் ஜூன் 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெறும். விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள்,முதுகலை ஆசிரியர்கள் பங்கேற்க தலைமை ஆசிரியர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உயர்கல்வியில் தமிழக அரசின் 7.5% ஒதுக்கீடு பெற அனைத்து விவரங்களையும் எமிஸ் இணையதளத்தில் விடுதலின்றி பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது பணியை கவனமாக மேற்கொள்ள வேண்டும். விடைத்தாள்கள் தைக்கும் பொழுது கவனமாக செயல்பட வேண்டும்.தேர்வு மையங்கள் காற்றோட்டமாகவும் ,வெளிச்சமாகவும்,கழிவறைகள் சுத்தமாகவும் இருக்க லைமை ஆசிரியர்கள் வசதிகள் ஏற்படுத்தி தாருங்கள்.அரசுப்பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், மாணவர்களை தக்கவைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories: