எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு

பெரம்பலூர், மே 20: பெரம்பலூரில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநிலத்தலைவரான நெல்லை முபாரக் நேற்று பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி பெரம்பலூரில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத் தலைவர் முகமது இக்பால், விவசாயிகள் அணி மாநில பொருளாளர் சகாபுதீன், மாவட்ட பொதுச்செயலாளர் முகமதுரபிக், செயலாளர்கள் அப்துல்கனி, அஹமத் இக்பால், பொருளாளர் ஜியாவுதீன் அஹமத், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஷாஜகான் மற்றும் முகமது இப்ராஹிம் மற்றும் நகர கிளை நிர்வாகிகள் செயல்வீரர்கள் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக நெல்லை முபாரக் பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார்.

Related Stories: